உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2022-04-22 16:02 IST   |   Update On 2022-04-22 16:02:00 IST
தஞ்சையில் மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கார்த்திகேயன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்த முயன்றனர். போலீ-சாரை பார்த்ததும் லாரியை ஓட்டி வந்தவர் அங்கேயே விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீஸார் லாரியை சோ-தனை செய்ததில் மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.  

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Similar News