உள்ளூர் செய்திகள்
தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையைத் துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேகையில் கூறியதாவது;-
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டுமன்றி தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கி-யங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாக ஆய்வு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும்பணியைத் இப்பல்கலைக்கழகப் பதிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.
இப்பதிப்புத் துறையின் மூலம் இதுவரை 525 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக 12-வது திட்ட நல்கை நிதியிலிருந்து 2021-ம் ஆண்டில் 16 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. 2021-22&ம் ஆண்டில் 43 மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டில் ரூ.13.57 லட்சத்துக்கு நூல்கள் விற்கப்பட்டன.
இவ்வாண்டு இதுவரை ரூ.2.94 லட்சம் மதிப்பில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயன்-பெறும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளின்போது 50 சதவீதம் சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டும் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ந் தேதி வரை 30 நாள்களுக்கு 50 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை நடைபெறுகிறது.
இதை மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழறிஞர்-கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9489102276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.