உள்ளூர் செய்திகள்
திருச்சியில் நாளை கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருச்சியில் நாளை கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் தலைமையில்
திருச்சி மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன முகவர்கள் எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் கியாஸ் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கியாஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது