உள்ளூர் செய்திகள்
2 கைக்குழந்தைகளுடன் வறுமையில் வாடும் இளம் விதவைக்கு அரசு பணி வழங்க வேண்டும்-சட்டசபையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
2 கைக்குழந்தைகளுடன் வறுமையில் வாடும் இளம் விதவைக்கு அரசு பணி வழங்க வேண்டும் என சட்டசபையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி பேசினார்.
நெல்லை:
நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நேற்றைய சட்டசபை விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:- நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 26). இவரது கணவர் லிங்கதுரை.
கடந்த 5.11.2020 அன்று, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, நடுரோட்டில் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கணவனை பறிகொடுத்த சுகன்யாவுக்கு 2 கைக்குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது அவர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சிக்காலத்தில், பலமுறை முறையிட்டும், இந்தப் பெண்மணிக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்பட வில்லை.
எனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இளம்பெண் சுகன்யா மீது கருணை கொண்டு, அந்த ஏழை இளம் விதவைத் தாய்க்கும், அரசு வேலைவாய்ப்பையும், நிவாரண உதவியையும் வழங்கி உதவிட வேண்டுகிறேன். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.