உள்ளூர் செய்திகள்
சீசன் துவங்கியதால் முருங்கைக்காய் விலை சரிவு விலை ரூ.25 க்கு விற்பனை
தருமபுரி மாவட்டத்தில் சீசன் துவங்கியதால் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முருங்கைக்காய் கிலோ ரூ.25 க்கு விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருங்கைக்காய் ஒன்று ரூ.20 வரையிலான விற்பனையானது. ஆனால் தற்போது சீசன் துவங்கியுள்ளதால் தருமபுரியில் உள்ள உழவர் சந்தைகள், வாரச்சந்தைக்கு ஓசூர் மார்க்கெட்டில் இருந்து முருங்கை வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த மாதம் வரை ரூ.50 க்கு விற்பனையான முருங்கை, தற்போது விலை சரிந்துள்ளது. நேற்று தருமபுரி உழவர் சந்தையில் முருங்கை கிலோ ரூ.25 க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.