உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப் பண்ணையில் வயது முதிர்ந்த முதலை ஒன்று உயிரிழந்தது.
பென்னாகரம்,
பென்னாகரம் வட்டத்தில் காவிரி யாற்றங்கரையில் உள்ள சுற்றுலா தலம் ஒகே னக்கல். இங்குள்ள முதலைப் பண்ணை அரசு சார்பில் வனத்துறையால் பராமரிக் கப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் 105 முதலைகள் உள்ளன. இவற்றில் 45 வயதுடைய ஆண் முதலை ஒன்று வயது முதிர்வு காரணமாக நேற்று முன் தினம் மாலை உயிரிழந் தது.
மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு வழிகாட்டு தலின் பேரில் வனத்துறை கால்நடை மருத்துவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வரவழைக் கப்பட்டார்.
உயிரிழந்த முதலையின் உடலை கால்நடை மருத்துவர் நேற்று பிரேத பரிசோதனை செய்தார். அதன் பின்னர் வனத்துறை மரபுகளின்படி முதலையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் வயது முதிர் வால் முதலை உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற முழு விவரம் தெரியவரும்’ என தெரிவித்தனர்.