உள்ளூர் செய்திகள்
.

கம்பைநல்லூர் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்த வாலிபர் சாவு

Published On 2022-04-22 15:27 IST   |   Update On 2022-04-22 15:27:00 IST
கம்பைநல்லூர் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்த வாலிபர் பலியானார்.
மொரப்பூர், 

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள கொரங்கேரி கிராமத்தை  சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சக்திவேல் (வயது26). இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் துர்கா (4), வர்னித் மற்றும் நான்கு நாட்கள் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நி¬லியல் சக்திவேலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. தீராத வயிற்று வலி காரணமாக நேற்று முன்தினம் மதுவில் பூச்சி மருந்தை கலந்து சக்திவேல் குடித்தார்.

இதனால் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News