உள்ளூர் செய்திகள்
.

மொரப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு

Published On 2022-04-22 15:25 IST   |   Update On 2022-04-22 15:25:00 IST
மொரப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மொரப்பூர், 

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 19 ந்தேதி ஆர்.கோபிநாதம்பட்டியில் இருந்து ராமாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது வாட்டர் டேங்க் அருகே நாய் குறுக்கே வந்த தால் திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மொரப்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  சின்னசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News