உள்ளூர் செய்திகள்
நாகலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் தேனி கலெக்டர் ஆய்வு

Published On 2022-04-22 15:22 IST   |   Update On 2022-04-22 15:22:00 IST
கூட்டுறவு கடன் சங்கத்தில் தேனி கலெக்டர் ஆய்வு செய்தார்
தேனி:

தேனி மாவட்டம் நாகலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தங்க நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:

தேனி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள்,  தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு சிக்கன நாணய  சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உள்பட 93 சங்கங்கள், 108 கிளைகள்  மூலம் 27,305 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.95.83 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் மற்றும் நகைகள் வழங்கப்பட்டுள்ளது.

 நாகலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தங்க நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 223 பயனாளிகளுக்கு ரூ.64.12 லட்சம் மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்கள்  கூட்டுறவுச் சங்கம்,  வங்கியில் பொது மக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் விளம்பரப் பலகையில் பொருத்தி  வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், நகை கடன் தள்ளுபடி தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரித்திடவும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

Similar News