உள்ளூர் செய்திகள்
கைது

சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட பாய்ந்தவர் கைது

Published On 2022-04-22 15:22 IST   |   Update On 2022-04-22 15:22:00 IST
மதுரை அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட பாய்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை

செக்கானூரணி போலீஸ்நிலையத்தில் முருகராஜா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். 

சம்பவத்தன்று மதியம் அவர் போலீஸ் ஏட்டு மற்றும் போலீஸ் காரருடன் கருமாத்தூரில் ரோந்து சென்றார். கோட்டை மந்தைபகுதியில் வாலிபர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீ சார் அவரை சோதனை செய்தனர். 

அவரிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது அவர் “ஒழுங்காக போய் விடுங்கள்; இல்லையென்றால் வெட்டிக்கொன்று விடுவேன்” என்று மிரட்டினார். 

போலீசார் அந்தவாலிபரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவர் புலித்தேவன்பட்டி தர்மராஜா (32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News