உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

லாரியை மறித்து வாலிபருக்கு கத்தி குத்து - 3 சிறுவர்கள் கைது

Published On 2022-04-22 15:16 IST   |   Update On 2022-04-22 15:16:00 IST
தஞ்சை அருகே லாரியை மறித்து வாலிபரை கத்தியால் குத்தியதில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வல்லம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பட்டுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 26) லாரி டிரைவர். இவர் கான்கிரீட் மிஷின் வைத்து நடத்துபவரிடம் வேலை பார்த்து வருகிறார்.

இந்நி-லையில் அந்த கான்கிரீட் மிஷின் நிறுவனத்தை சேர்ந்தவர்-களுக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஸ்டாலின் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த

அருள்பிரபாகரன் (36) ஆகிய இருவரும் லாரியில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்விராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த விஜி

என்கிற விஜயகுமார், ஆனந்த் (17), அய்யாத்துரை (17), ராமமூர்த்தி (17), புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை சின்னத்துரை ஆகிய 5 பேரும் லாரியை வழிமறித்து ஸ்டாலினிடம் தகராறு

செய்துள்ளனர்.இதை அருள்பிரபாகரன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் உட்பட 5 பேரும் சேர்ந்து அருள்பிரபாகரனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில்

படுகாயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் ஸ்டாலின் புகார் செய்தார். இதன்பேரில்

சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அய்யாத்துரை, ராமமூர்த்தி ஆகிய மூன்று சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை தஞ்சையில் உள்ள

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவான விஜயகுமார், சின்னத்துரை ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இதில் விஜயகுமார் மீது கள்ளப்பெரம்பூர் போலீசில் வழக்குகள்

நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News