உள்ளூர் செய்திகள்
நெல் உற்பத்தியில் சாதனை.

நெல் உற்பத்தியில் சாதனை

Published On 2022-04-22 15:12 IST   |   Update On 2022-04-22 15:12:00 IST
நெல் உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் ஏக்கரில் நெல்உற்பத்தி செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஒன்றியம் நெல் களஞ்சியமாக உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நெல் உற்பத்தியும் தொடர்ச்சியாக நல்ல விளைச்சல் கண்டுள்ளது. 2021&22ஆம் ஆண்டில் மட்டும் 1.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 4Ñ லட்சம் டன் நெல் விளைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக 2020&21ம் ஆண்டில் 29 இடங்களில் மட்டுமே அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைந்திருந்தது. நடப்பு ஆண்டில் 80 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டும் 30 ஆயிரம் டன் நெல் மட்டுமே விவசாயிகளிடம் அரசால் பெறப்பட்டுள்ளது. 

அதை 1 லட்சம் டன்னாக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் திருவாரூருக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம் நெல் விளைச் சலில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

 மத்திய அரசின் வளரும் பட்டியலில் வேளாண்மைத் துறைக்கு ரூ.6 கோடி சிறப்பு நிதியும் அதனடிப்படையில்  அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News