உள்ளூர் செய்திகள்
கலெக்டர் செந்தில்ராஜ்.

கடம்பூர் கிராமத்தில் 24-ந் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் தகவல்

Published On 2022-04-22 14:40 IST   |   Update On 2022-04-22 14:40:00 IST
கடம்பூர் கிராமத்தில் வருகிற 24-ந் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
           
கயத்தாறு வட்டம் கடம்பூர் கிராமம்  மாரியப்பன் நாடார் ராமலட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ந் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மனுக்களை பெறுகிறார்கள். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News