உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம்
தஞ்சை அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
வல்லம்:
திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன், தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் நடராஜன் (40), என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, புதுகரியாப்பட்டி பிரிவு சாலை அருகே கட்டளை வாய்க்கால் தடுப்புச் சுவரில் பஸ் மோதியது.இதில் பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், 13 பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்-திற்கு வந்த செங்கிப்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்சில் மீட்டு தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.