உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரியை கிருஷ்ணராயபுரத்தில் அமைக்க கோரிக்கை
வேளாண் கல்லூரியை கிருஷ்ணராயபுரத்தில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்ட வேளாண் கல்லூரியை கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் அமைக்கவேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது,
வாய்க்கால், குளம், ஏரி, கிணறு, மானாவாரி பாசனங்கள் நிறைந்த நஞ்சை, புஞ்சை, தோட்டக்கலை பயிர் சாகுபடிகள் நிறைந்துள்ள கரூர் மாவட்டத்திற்கு வேளாண் கல்லூரி வழங்கி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதலாண்டில் அதிகளவில் பெண்கள் சேர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
வேளாண்மை கல்லூரிக்கான இடத்தேர்வு நடந்து வரும் நிலையில் அதனை கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறி நடவடிக்கை எடுக்கவேண்டும். பல ஆண்டுகளாக விவசாயிகள் இக்கோரிக்கையை மனுவாக அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் முறையாக போட்டியிட்டு வென்ற குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் தான் அப்போது கிருஷ்ணராயபுரம் இருந்தது. எனவே கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் வேளாண் கல்லூரியை அமைத்து அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.