உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தொடக்கம்

Published On 2022-04-22 14:10 IST   |   Update On 2022-04-22 14:10:00 IST
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது
கரூர்:

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் கரூர் அரசு கலை கல்லூரியில் நேற்று தொடங்கியது. 8ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதி கொண்ட 24 பதவிகளுக்கு கணிசமான பொறியியல் பட்டதாரிகள். மேலும், பட்டப்படிப்பு, முதுநிலை, பி.எட் உள்ளிட்ட இரட்டை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 3,565 விண்ணப்பித்துள்ளனர்.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) என்.முரளிதரன் தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. மரங்களில் 5 கறவைப்பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரு பெண்கள் ஓட்டும் சைக்கிள் உள்ளிட்ட 5 சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பை தொடர்ந்து சைக்கிளை இயக்குதல், கறவை பசுக்களை கையாளுதல் சோதனை மற்றும் நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள் சைக்கிள் எடுத்து சிறிது தூரம் ஓட்டி காட்டினர். மரங்களில் பசுவைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து மீண்டும் கயிற்றைக் கட்டினர். நேர்காணல் பணியில் கால்நடை ஊழியர்கள் 65 பேர் ஈடுபட்டிருந்தனர்.

24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீங்கலாக வரும் 26ம் தேதி வரை 5 நாட்கள் நேர்காணல் நடைபெறுகிறது. நாள்தோறும் 800 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இன்று 800 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Similar News