உள்ளூர் செய்திகள்
கபாடி போட்டி நடந்தபோது எடுத்த படம்.

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் மாணவிகளுக்கான கபாடி போட்டி

Published On 2022-04-22 13:48 IST   |   Update On 2022-04-22 13:48:00 IST
குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் மாணவிகளுக்கான கபாடி போட்டி நடந்தது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகள்  நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கேரம், சதுரங்கம், இரட்டையர் கேரம், சதுரங்கம் போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 

கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ரவி போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொரு போட்டிக்கும், ஒருவர் வீதம் பொறுப்பேற்றுள்ளனர். இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

Similar News