உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் எஸ்.பி. ஆபீசில் புகார் மனு அளித்துவிட்டு திரும்பியவர் மயக்கம்
திண்டுக்கல் எஸ்.பி. ஆபீசில் புகார் மனு அளித்துவிட்டு திரும்பியவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள ராஜக்காபட்டி, கல்லுப்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி அங்கம்மாள் (வயது 55). இவர் ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.
அப்போது அவரது சுருக்குப்பையில் இருந்த ரூ.13 ஆயிரம் பணத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் திருடிச் சென்றுவிட்டார். இதை அறிந்த அங்கம்மாள் அவரது வீட்டிற்குச் சென்று தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணத்தைத்தர மறுத்ததுடன் குடிபோதையில் அங்கம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். இதனால் மனமுடைந்த அங்கம்மாள் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.
தனது பணத்தை பெற்றுத் தருமாறு மனு கொடுத்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
உழவர் சந்தை அருகே வந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.