உள்ளூர் செய்திகள்
மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாஸ்கர் போட்டியின்றி தேர்வு
மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாஸ்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கரூர்:
தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் 2 கட்டமாக மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், இணை செலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதனையொட்டி கரூர் மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்களாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் பதவிக்காக முன்னாள் போக்குவரதுத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விருப்பமனு அளித்தார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. இதனால் கரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், இணை செலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்காக அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்தனர்.