உள்ளூர் செய்திகள்
மணவாள நகரில் மின் தடையால் ஆத்திரம்- மின் அலுவலகத்தை சூறையாடி ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
மின்வாரிய அலுவலகம் சூறை, ஊழியர் மீது தாக்குதலை கண்டித்து மணவாளநகர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர்:
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு இளநிலை பொறியாளர் காஞ்சனா மற்றும் உதவியாளர்கள் குப்பன், முரளி ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது மணவாள நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மின்வாரிய அலுவலகத்தை நொறுக்கி சூறையாடினர். மேலும் ஊழியர் குப்பனையும் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குப்பன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மணவாளநகர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே மின்வாரிய அலுவலகம் சூறை, ஊழியர் மீது தாக்குதலை கண்டித்து மணவாளநகர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.