உள்ளூர் செய்திகள்
,

வாகனம் மோதி நாடக இயக்குனர் சாவு

Published On 2022-04-22 12:34 IST   |   Update On 2022-04-22 12:34:00 IST
வாகனம் மோதி நாடக இயக்குனர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம்பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 63). நாடக இயக்குனர். இவர் கடந்த 1-ந் தேதி ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் பந்தல் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஒன்று அசோகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. 

இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோகன் இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News