உள்ளூர் செய்திகள்
பலி

மதுரையில் சோகம் - விஷ வாயு தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி

Published On 2022-04-21 23:43 IST   |   Update On 2022-04-21 23:43:00 IST
மதுரையில் விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை:

மதுரை மாநகராட்சியில் சிவக்குமார், சரவணன், லட்சுமணன் ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றினர்.

இந்நிலையில், மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க 3 பேரும் சென்றனர். அப்போது விஷ வாயு தாக்கி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Similar News