உள்ளூர் செய்திகள்
கீழ்பெரும்பாக்கத்தில் தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
கீழ்பெரும்பாக்கத்தில் சாலையினை ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகம் மூலம் தேவையற்ற வேகத்தடைகளை அப்புறப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் முழுமையாக செயல்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் கழிவுநீர் கால்வாய் இல்லாத பகுதிகளுக்கு நகராட்சியின் மூலம் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்திடவும், நாள்தோறும் வீதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள நகராட்சி பணியாளர்கள் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, சண்முகபெருமாள் தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் செயல்படாமல் பராமரிப்பின்றி உள்ளதை பார்வையிட்டு, நகராட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக இந்த கட்டிடத்தை சரிசெய்து மீண்டும் இந்த பகுதிக்கான அங்கன்வாடி மையம் இங்கு செயல்பட அலுவலர்கள் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், ஏரிக்கரை பகுதியில் உள்ள கல்லூரி சாலையில், வேகத்தடைகள் அதிகமாக உள்ளதாள் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. அதை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த சாலையினை ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகம் மூலம் தேவையற்ற வேகத்தடைகளை அப்புறப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதில் நக ராட்சி ஆணையர் சுரேந்தி ஷா மற்றும் அரசு அலுவலர் கள் உட்பட பலர் உடனிருந்தனர்.