உள்ளூர் செய்திகள்
குடிநீர் பிரச்சினை.

குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

Published On 2022-04-21 16:42 IST   |   Update On 2022-04-21 16:42:00 IST
ராமநாதபுரம மாவட்டத்தில் குடிநீர் இல்லாமல் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 100க்கும் அதிகமான கிராமமக்கள் தினமும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கான புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2009ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ரூ.616 கோடியில் செயல்படுத்தப்பட்டது. 

அதன்படி திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு முத்தரசநல்லூர் காவிரி ஆற்றில் 4 கிணறுகள் அமைக் கப்பட்டு அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட் சிகள் மற்றும் 1,332 கிராமங் களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.

திருச்சி பகுதியில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டருக்கு மின்மோட்டார் மற்றும் தானாகவே தண்ணீர் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டும் தினமும் 78 மில்லியன் லிட்டர், அதாவது 780 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டது.

மாவட்டத்துக்கான 780 லட்சம் லிட்டர் தண்ணீரில், ராமநாதபுரம் நகராட்சிக்கு மட்டும் தினமும் 56 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோ கிக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதற்காக நகரில் 8 மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கோடை காலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் விநியோகம் மிகக்குறைந்தே காணப்படுகிறது. 

திருச்சி பகுதியில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட கிணறுகளில் இருந்தே தினமும் 715 லட்சம் லிட்டர் தண்ணீரே விநியோகிக்கப்படுகிறது. அதன்படி 65 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைகிறது. அப்படி குறைந்துவரும் தண்ணீரும் முறையாக முழுமையாக விநியோகிக் கப்படவில்லை. குழாய் உடைப்பு, குடிநீர் திருட்டு என சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் முறையின்றி செல்கிறது. ஆகவே தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படாமலே உள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் பற் றாக்குறை தினமும் ஏற்படுகிறது. இதனால், வாரத்தில் 3 நாள்கள் என்ற அடிப்படையிலேயே தண்ணீர்   விநி யோகிக்கப்பட்டு வருகிறது.  வரும் தண்ணீரால் ராமநாதபுரம் நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய 56 லட்சம் லிட்டரில் அதிகபட்சமாக 33 லட்சம் லிட்டர் தண்ணீரே விநியோகிக்கப்படுகிறது. 

ஊரகப் பகுதிகளில் 2,332 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகிக் கப்படுவதாக அறிவிக் கப்பட்டது. ஆனால், 2,213 கிராமங்களே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. 

அதனடிப்படையில் மாவட்டத்தில் 119 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களில்கூட தண்ணீர் வழங்கப்படாமலே உள்ளன.திருப்புல்லாணி, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்படி பல கிராமங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கப்படாத நிலையுள்ளதாக அந்தப்பகுதியினர் தெரி விக்கின்றனர். 

கூட்டுக்குடிநீர் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் உப்பாக இருந்தாலும் அதையே குடிநீராகப் பயன் படுத்தும் கட்டாயத்திலும் மக்கள் உள்ளனர். அப்படி பயன்படுத்துவோரில் பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பும் இருப்பது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப்படி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் திட்டமிட் டுள்ளதாக அதிகா ரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த பிரச்னை குறித்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட ஆற்றுக் கிணறுகள் தூர்வாரப்பட்டு தற்போது 4 ஆயிரம் லிட்டர் கூடுதலாகவே கிடைத்து வருகிறது. மேலும் விரைவில் மேட்டூரில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்ப டுத்தப்பட உள்ளது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடும் என்றனர்.

Similar News