உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் பகுதி கடைகளில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டிவனம் பகுதி கடைகளில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-04-21 16:22 IST   |   Update On 2022-04-21 16:22:00 IST
நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் விவேகானந்தர், நேரு, மாரியம்மன் கோவில், மற்றும் புது மசூதி உள்ளிட்ட தெருக்களில் உள்ள கடைகளில் இருந்து சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.11,300 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மேலும் கடைக்காரர்களிடம் பாலித்தீன் பைகள் மற்றும் கப்புகளை பயன் படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

Similar News