உள்ளூர் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆய்வு
தஞ்சையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 விதமான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1054 கோடி மதிப்பில் சாலை வசதி, குடிநீர், பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம்
உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான டேவிதார் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டேவிதார் தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் திருமானூர் குடிநீர் திட்ட பணிகளை
ஆய்வு செய்தார். பணிகள் எந்த அளவில் முடிந்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர்
ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் கார்த்தி-கேயன், அரச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.