உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
திண்டிவனம் பஸ்சில் கஞ்சா கடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில், போலீசார் கணேசன், ஜனார்த்தனன், வரதராஜ், அடங்கிய தனிப்படை போலீசார் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சென்னை பஸ்சில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இறங்கிய வேகமாக வந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் விக்கரவாண்டியைச் சேர்ந்த சேர்ந்த ஜான் பாஸ்கோ (வயது 31) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, ஜான் பாஸ்கோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டிவனம் எஸ்பி அபிஷேக் குப்தா கூறுகையில், கஞ்சா, குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கஞ்சா, குட்கா வேட்டை தொடரும் எனவும் தெரிவித்தார்.