உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. பகுதி இளைஞரணி செயலாளர் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார்.

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனு

Published On 2022-04-21 15:49 IST   |   Update On 2022-04-21 15:49:00 IST
தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரும், பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரும், பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் நேற்று  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு  மனு அளித்தார். பின்னர் அ.தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தனது அ.தி.மு.க. வேட்பாளர் திருச்சிற்றம்பலம் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தபோது குற்ற வழக்குகளை மறைத்து உள்ளதாகவும் மேலும் அவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பி.ஏ படித்ததாகவும் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். 
தங்கள் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் திருச்சிற்றம்பலம் வேட்பு மனு தாக்கலின் போது தனது குற்ற வழக்குகளை தெரிவித்துள்ளார். காவல் துறையில் வழங்கிய நற்சான்றிதழ் குற்ற வழக்குகளை தெரிவித்துள்ளனர்.

வேட்புமனு பரிசீலனை போது எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் தற்போது திட்டமிட்டு தங்கள் மீது அவதூறு பரப்பும் பா.ஜ.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News