உள்ளூர் செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்ற காட்சி.

புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

Published On 2022-04-21 15:40 IST   |   Update On 2022-04-21 15:40:00 IST
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி, சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி, சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. 

இதனையொட்டி மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். 

விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கணேஷ்குமார், ஆனந்தவள்ளி, காளீஸ்வரி, கர்னிகா ஆகியோர் செய்தனர்.

Similar News