உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மங்களகிரியில் சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மங்களகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் மங்களகிரியில் அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மேல கூட்டுடன் காடு பஞ்சாயத்து தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு சிகிச்சை பெற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. மக்களை தேடி மருத்துவம் திட்ட அடிப்படையில் உரிய பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
முகாமில் தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் டாக்டர் யமுனா, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் காசநோய் டாக்டர் சுந்தரலிங்கம், உதவி திட்ட மேலாளர் டாக்டர் லீலா, பிரியதர்ஷினி, டாக்டர் கன்னியம்மாள், மக்களை தேடி மருத்துவ திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுருதி, தூத்துக்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வரத்தினம், ஸ்ரீவைகுண்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தினேஷ் உள்பட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும் முகாமில் தூத்துக்குடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகர் திலகா மற்றும் நல்லதம்பி, தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.