உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டணை

Published On 2022-04-21 15:07 IST   |   Update On 2022-04-21 15:07:00 IST
வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது
கரூர்:


குளித்தலை  அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு கரூர் மாவட்ட  அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இவ்வழக்கில் இருந்து 3 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை சிவாயம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வயலூர் சரவணபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 33). இவருக்கு அய்யர்மலை மற்றும் இரும்பூதிப்பட்டியில் பேக்கரி உள்ளது. பிச்சை கடைக்கு அடிக்கடி வந்த மகேஸ்வரன் அங்கு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காததுடன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

   இதனால் ஆத்திரமடைந்த பிச்சை, அவரது நண்பர்களான கலிங்கப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்கிற செல்வராஜ் (25), வரகூரைச் சேர்ந்த பெருமாள் (44), பழனிவேல், சின்ன மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் (38) ஆகிய 5 பேரும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மகேஸ்வரனை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று

அவரை அரிவாளால் வெட்டியும், கல்லை தூக்கி தலையில் போட்டும் கொலை செய்தனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

   கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வந்த இவ்வழக்கில் நீதிபதி கிறிஸ்டோர் நேற்று அளித்த தீர்ப்பில், பிச்சை, செல்வம் என்கிற செல்வராஜ் ஆகிய 2 பேருக்கும் தலா ஒரு ஆயுள் சிறைத் தண்டனையும், உயிரிழந்த மகேஸ்வரன் குடும்பத்திற்கு இருவரும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மற்ற 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில அரசு வழக்கறிஞராக செந்தில்குமார் ஆஜரானார்.

Similar News