உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் பெண்ணை சேர்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு

Published On 2022-04-21 15:05 IST   |   Update On 2022-04-21 15:05:00 IST
ஆண்டான்கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 40 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடி உத்தரவின் படி வலங்கைமான் ஒன்றியம் ஆண்டான்கோவில் பகுதியில் 17 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு

பாதுகாப்பும் கவனிப்பும் மன நல சிகிச்சையும் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருந்து வந்த நீலமேகம் என்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்பு செய்து நம்பிக்கை

மனநல காப்பகத்தில் சேர்த்திட திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு உதவிகளை நேரிடையாக களத்தில் செய்துவரும் குழந்தைகள் தடுப்பு காவல் ஆய்வாளர் மணிமேகலைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் குழந்தைகள் தடுப்பு காவல் ஆய்வாளர் மணிமேகலை மற்றும் தலைமை காவலர் மீனாட்சி மற்றும் பெண்கள் முதியோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கு நேரடியாக பல்வேறு

உதவிகளை செய்து வரும் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை நிர்வாகி சுமிதா மற்றும் மெர்லின் மற்றும் காவலர்கள் மீட்டெடுத்து உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்

திருத்துறைப்பூண்டில் உள்ள நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல சிகிச்சைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கொண்டு வந்து சேர்த்தனர். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன்

தலைமையில் காப்பகத்தில் சேர்த்துக்கொண்டு பேசியபோது,திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன்

பல்வேறு முயற்சிகள் எடுத்து செயல்பட்டு வருகிறார் தொடர்ந்து காவல் துறை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் நம்பிக்கை மனநல காப்பகத்தில் பணியாளர்கள் சரவணன் கோகிலா அம்மு

ஆகியோர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

Similar News