உள்ளூர் செய்திகள்
கீ.வீரமணி

இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் எதிர்ப்பு

Published On 2022-04-21 14:52 IST   |   Update On 2022-04-21 14:52:00 IST
இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் எதிர்ப்பு உள்ளது என்று கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
கரூர்:

கரூரில் நடந்த திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணம் 16-ம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து கரூரில் தங்கியிருந்த தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணிப்பதால் மருத்துவக் கனவோடு உள்ள ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேறற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

புதிய கல்விக்கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி என்பதை விட படிப்பு தடுப்பு கல்வி சட்டம் எனலாம். குலக்கல்வித் திட்டத்தை தான் மீண்டும் தேசிய புதிய கல்வித்திட்டம் என அறிமுகம் செய்கின்றனர். புதிய கல்விக்கொள்கை என்பது ராஜாஜியின் பழைய குலக்கல்வி திட்டம்தான்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் எனக்கூறி 3வது மொழியாக சமஸ்கிருதம், இந்தியை பரப்பவேண்டும் என்பது தான் திட்டம். இந்தியை படிக்க வைக்க இந்தியை மறைமுகமாக திணிக்கின்றனர். இந்தியை இணைப்பு மொழி என்கின்றனர். 

தமிழகம் மட்டும் இந்தியை எதிர்க்கவில்லை. கர்நாடகாவில் இதற்கு எதிர்ப்பு உள்ளது. மறைமுகமாக சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையே இது என்றார்.

Similar News