உள்ளூர் செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாதம்மாள்.

ஒகேனக்கல் அருகே யானை தாக்கி பெண் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2022-04-21 14:26 IST   |   Update On 2022-04-21 14:26:00 IST
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்தார்.
பென்னாரம், 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட பண்ணப்பட்டியை சேர்ந்த சின்னராஜூ மனைவி மாதம்மாள் (வயது45) இவர்கள் பண்ணம்பட்டி வனப் பகுதியில் சுண்டைக்காய், தேன், புளி, கிழங்கு ஆகியவற்றை சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாதம்மாள் உள்பட 10&க்கும் மேற் பட்டவர்கள் சின்னாற்றில் குளிக்கச் சென்றனர்.

பின்னர் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு மாதம்மாள் வந்தார். அப்போது திடீரென அங்கிருந்து புதர் மறையில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை மாதம்மாளை தாக்கியது. இதை கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதுடன், யானையை விரட்டினர். இதையடுத்து யானை அங்கிருந்து சென்று விட்டது. படுகாயமடைந்த மாதம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பென்னாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்து ஒகேனக்கல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Similar News