உள்ளூர் செய்திகள்
நாட்டு துப்பாக்கியுடன் கைதான வாலிபர் சோமு

ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டைக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது

Published On 2022-04-21 14:25 IST   |   Update On 2022-04-21 14:25:00 IST
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டைக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்
பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிலர் மான் உள்ளிட்ட விளங்குகளை வேட்டையாடி வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து ஒகேனக்கல் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப் படுத்தினர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலம்பாடி வனப்பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலு வலர் சேகர் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியிர் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதிக்குள் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் ஒகேனக்கல் அடுத்த நாடார்கொட்டாய் பகுதியை சேர்ந்த சோமு (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் கரையோர பகுதியில் மானை வேட்டையாடி கறியை எடுத்து சென்று விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட சோமு வை கைது செய்து வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

Similar News