உள்ளூர் செய்திகள்
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மாயம்
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அக்ரம். இவரது மனைவி நூர்ஆயிஷா (வயது 21). 5 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தனது தாய் நர்கீசுடன், நூர் ஆயிஷா வந்தார். அப்போது நர்கீஸ், மாத்திரை வாங்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தார். அங்கு நூர் ஆயிஷாவை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மகளை பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து அவர் தருமபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.