உள்ளூர் செய்திகள்
சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எஸ்.பி. உத்தரவு
திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டுள்ளார்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு வழிமுறைகளை எடுத்துக்கூறி அதனை கண்டிப்புடன் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து அரசு பஸ் டிரைவர்களுக்கும் முறையான பயற்சி மற்றும் புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும்.
விபத்து ஏற்படுத்தாமல் வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழிப்படிவம் பூர்த்தி செய்து பெற வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டும் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விதிகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அவர்களது லைசென்ஸ்சை உடனடியாக ரத்து செய்யவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தப்-பட்டது.
அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை அறிந்து அந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிக்கையை ஒவ்வொரு சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தின் போதும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இறப்பு விபத்து நடைபெற்ற இடத்தில் மஞ்சள் நிறத்தில் விபத்துக்கான குறியீடு வரைய அனைத்து டி.எஸ்.பி.க்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
பழுதாகி நிற்கும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அதனையும் பழுது நீக்கி அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், போக்குவரத்து கழக உதவி பொறியாளர், நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.