உள்ளூர் செய்திகள்
விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்.

விதிமுறைகளை மீறும் சிறுவர்கள்

Published On 2022-04-20 16:46 IST   |   Update On 2022-04-20 16:46:00 IST
ராமநாதபுரத்தில் விதிமுறைகளை மீறி சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிவருகின்றனர்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேசுவரம் என மாவட்டத்தின் நெரிசல் மிகுந்த ரோடுகளில் விதி முறைகளை மீறி சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வதை காணமுடிகிறது. 

போலீசார் கண்டிக்காத தாலும், பெற்றோர் ஆதரிப்பதாலும் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரிக்கின் றன.பெரும்பாலும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் தூரத்தை பொருத்து நடந்தும், சைக்கிளிலும், பஸ்சிலும் பள்ளிக்கு செல்வார்கள். 

கொரோனா தொற்று காலத்தில் 1 ஆண்டுகள் வீட்டில் இருந்த சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிபழகியதால் தற்போது பள்ளி தொடங்கிதும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வது அதிகரித்துள்ளது. பஸ்களில் ஏற்படும் நெரிசலாலும், தாங்களும் கொண்டு சென்று விட்டு வரமுடியாது என்ப தாலும் பெற்றோர்களும் இந்த விதிமீறலை ஆதரிக்கின்றனர். 

போக்குவரத்து விதிமுறைகளை அறியாத இந்த சிறுவர்கள், ரோட்டில் தாறுமாறாக நினைத்த இடங்களில் முன்னெச்சரிக்கை செய்யாமல் திரும்புவது, ஒருவழிபாதையில் எதிர்புறமாக வாகனங்களை ஓட்டிவருவது என்று பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். 

இதனால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ரோடுகளை பெரும்பாலான நேரங்களில் போலீசார் கண்காணிப்பதில்லை. இது இருசக்கர வாகனங்களில் செல்லும் சிறுவர்களுக்கு சாதகமாகி விட்டது. இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெரும்பாலான சிறுவர்களுக்கு வண்டியை கால்கள் ஊன்றி நிறுத்தும் அளவிற்கு எட்டுவதில்லை. அவசரகதியில் பிரேக் பிடிக்கும்போது சிறுவிபத்தை சந்திக்கின்றனர். 

இந்த விஷயத்தில் போலீசார் மற்றும் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்தி சிறுவர்கள் இரு சக்கரவாகனம் ஓட்டுவதை தடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News