உள்ளூர் செய்திகள்
நான் முதல்வன் நிகழ்ச்சியில் கலெக்டர் மாணவர்களுடம் உரையாடிய காட்சி.

அரசு பள்ளியில் நான் முதல்வன் நிகழ்ச்சி

Published On 2022-04-20 16:01 IST   |   Update On 2022-04-20 16:01:00 IST
அரசு பள்ளியில் நான் முதல்வன் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலெக்டர் உரையாற்றினார்.
கரூர் :

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை மற்றும் உயரே பறக்க ஆசை, என்ற நான் முதல்வன் நிகழ்ச்சி இணைய தள வாயிலாக மாணவர்கள் பயில்வதை கலெக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு தெரிவித்ததாவது, 

பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி, வேலை-வாய்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக சிறகை விரித்து உயரே பறந்து உலகை காண்போம் வா என்ற நான் முதல்வன் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5,880 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளின் நிபுணர்கள் மாணவ மாணவியர்களுக்கு இணையதள வாயிலாக கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்க உள்ளார்கள். 

22  ந்தேதி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், 23 ந் தேதி கலைப்பிரிவு மாணவர்களுக்கும் என இரு கட்டங்களாக கரூர் மாவட்டத்தில் நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார்.

Similar News