உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க. மனு
பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க. மனு அளித்தனர்.
கரூர் :
தி.மு.க கரூர் மத்திய மாநகர பொறுப்பாளர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில் தி.மு.க.வினர் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கண்ணனிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் எழுதப்பட்டிருந்த தி.மு.க விளம்பரத்தை பா.ஜ.க.வினர் அழிக்கும்போது பார்த்து கண்டித்த தி.மு.க.வினரை தாக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தி.மு.க விளம்பரங்களை பா.ஜ.க.வினர் அழித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்.நாதன், மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.