உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

Published On 2022-04-20 10:07 GMT   |   Update On 2022-04-20 10:07 GMT
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
கரூர்:

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில்  மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்  வோல்ட்ரிக் 2022  நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் விக்னேஷ், அஜிபிரசாத் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி இக்கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.

கல்லூரியின் முதல்வரான ரமேஷ்பாபு மற்றும் முனைவர்  குமார் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறைத்தலைவர் ஆகியோரின் தலைமையில் கருத்தரங்கம் துவங்கப்பட்டது.

கருத்தரங்க ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை ஒருங்கிணைப்பாளர்கள் மணிராஜ், செல்வம், துறைப்பேராசிரியர்கள் மற்றும் துறைமாணவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர் விக்னேஷ்,யய அஜிபிரசாத் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரை கௌரவித்தப் பின்னர், வேலைவாய்ப்பினைப் பெற சிறந்த வழிமுறைகளைப் பற்றி விளக்கினர்.

மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர்கள் இணைந்து நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் சுமார் 250 மேற்பட்ட மாணவ மாணவிகள், 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து பங்குப்பெற்றனர்.
Tags:    

Similar News