உள்ளூர் செய்திகள்
மரணம்

பொதட்டூர்பேட்டை அருகே தொண்டையில் இட்லி சிக்கி 1½ வயது குழந்தை பலி

Published On 2022-04-20 13:21 IST   |   Update On 2022-04-20 13:21:00 IST
பொதட்டூர்பேட்டை அருகே தொண்டையில் இட்லி சிக்கி 1½ வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி:

ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஸ்ரீகாளிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன். இவரது 1½ வயது மகன் புவனேஷ்.

தயாளன், அத்திமாஞ்சேரி பேட்டையில் நடந்த தீமிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றார். அங்கு அவர் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் குழந்தை புவனேசுக்கு இட்லி ஊட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

இதனால் புவனேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை புவனேஷ் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News