உள்ளூர் செய்திகள்
கைது

பூந்தமல்லி அருகே கத்தியுடன் 2 பேர் கைது

Published On 2022-04-20 12:56 IST   |   Update On 2022-04-20 12:56:00 IST
பூந்தமல்லி அருகே கத்தியுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

பூந்தமல்லியை அடுத்த திருமழிசை பஜாரில் 2 வாலிபர்கள் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி வருவதாக பூந்தமல்லி போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துப்பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுது அவரது உத்தரவின் பேரில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், அங்கு கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அம்பத்தூர் சண்முகாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (24) அயப்பாக்கம் திருவள்ளூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த செல்வம் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கத்திகளை பறிமுதல் செய்தனர்.

Similar News