உள்ளூர் செய்திகள்
மு.க.ஸ்டாலின்

ஸ்ரீநகர் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக வீரருக்கு, முதலமைச்சர் இரங்கல்

Published On 2022-04-20 05:38 IST   |   Update On 2022-04-20 05:38:00 IST
நாட்டைக் காக்கும் பணியில் இருந்த போது உயிரிழந்தவருக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்.வீரர் எம்.என்.மணி,  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார் என்று அறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.

நாட்டைக் காக்கும் பணியில் இருந்தபோது உயிரிழந்த அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்து தவிக்கும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News