உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு சான்றுகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், செல்வராஜ் எம்.பி ஆகியோர் வழங்கினர்.

வட்டார அளவிலான சுகாதார திருவிழா

Published On 2022-04-19 16:08 IST   |   Update On 2022-04-19 16:08:00 IST
ஆலங்குடி ஊராட்சியில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா நடைபெற்றது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஆலங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கலை-ஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக துணை இயக்குனர் (பொது சுகா-தாரம்) ஹேமச்சந்காந்தி வரவேற்று பேசினார். 

மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்பிர-மணியன், வலங்கைமான் ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசன், நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்-செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு வட்டார அளவி-லான சுகாதார திருவிழாவை தொடக்கி வைத்தார்.
விழாவில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசிய-தாவது:&

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் தோல் மருத்துவம் காது மூக்கு தொண்டை எலும்பு மூட்டு மருத்துவம் ஆகிய-வைகளை மருத்துவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து தேவைப்ப---  டுவோருக்கு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்-கப்பட்டு வருகிறது. 

கொ-ரோனா நோய்த்தொற்று காலத்தில் மக்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்காக தங்கள் உயிரையும் பொருட்-படுத்தாமல் செயலாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் முன் களப் பணியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நோய்க-ளிலிருந்து தொடக்க நிலையிலே கண்டறிந்து குணப்ப-டுத்துவது இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அமைக்-கப்பட்டிருந்த திட்ட விளக்க கண்காட்சி அரங்-குகளை பொதுமக்களுக்கு மேற்-கொள்--ளப்பட்டுவரும் மருத்துவ பரிசோதனையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (மருத்துவம்) ரத்தினகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்-தராஜ், தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன், ஒன்றிய ஆணை--யர் (கிராம ஊராட்சி) பொற்செல்வி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜாத்தி மற்றும் ஞானசேகரன், ரஞ்சித், மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News