உள்ளூர் செய்திகள்
முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

முடிதிருத்தும் தொழிலாளர்கள் 22-ந் தேதி கடையடைப்பு போராட்டம்

Published On 2022-04-19 15:27 IST   |   Update On 2022-04-19 15:27:00 IST
5 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் 22-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம்:

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் தேவநாதன் முன்னிலை வகித்தார். , மாவட்ட செயலாளர் நாகராஜன் தொடக்க உரையாற்றினார்.

பொருளாளர் மணி மாறன் அறிக்கை வாசித்தார், முன்னதாக அனைவரையும் அவைத்தலைவர் ரங்கநாதன் வரவேற்றுப் பேசினார். , இதில் துணை செயலாளர் ராஜிவ், இணை செயலாளர் நாகலிங்கம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், 22 சமு தாயங்களை உள்ளடக்கிய மருத்துவ சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்கனவே 2.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி அது ரத்து செய்யப்பட்டதால் நாவிதர், மருத்துவர், மங்களா, காட்டுவேல நாயக்கர், இசை வேளாளர் ஆகிய சமூகங் களை இணைத்து 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 3 லட்சம் சலூன் கடைகளை அடைத்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.முடிவில் அமைப்பாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Similar News