உள்ளூர் செய்திகள்
கரூரில் 75 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தும் 75 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2ன் கீழ் 2021&22, 2022&23 ஆகிய நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் குறித்த கரூர் மாவட்டத்தில் உள்ள 75 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
வேட்டமங்கலம் ஊராட்சி மரவாபாளையத்தில் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரகுபதி வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடவூர் ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியில் தலைவர் நிலா தலைமையில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார்.
மேற்கண்ட 2 ஊராட்சிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 75 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.