உள்ளூர் செய்திகள்
அடுத்தடுத்த 3 கோவில்களில் கொள்ளை
ஆண்டிமடத்தில் அடுத்தடுத்துள்ள 3 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
அரியலூர்-:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் ஆர்.வல்லம் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன், முருகன் கோவில், மலையாத்தம்மன் ஆகிய கோவில்களில் உள்ளது.
இதில் மகா சக்தி மாரியம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சாமி சிலையில் இருந்த தங்க தாலிகளை மர்ம நபர்கள் நேற்று முன் தினம் இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் மகா சக்தி மாரியம்மன், விநாயகர், மலையாத்தம்மன் ஆகிய கோவில்களில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதில் மகா சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலில் சுமார் 20 ஆயிரம் ரூபாயும், விநாயகர் கோயில் உண்டியலில் 3 ஆயிரம் ரூபாயும், மலையாத்தம்மன் கோவில் உண்டியலில் சுமார் 10 ஆயிரம் ரூபாயும் பணம் இருந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பவம் அறிந்த போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கோயில்களில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.