உள்ளூர் செய்திகள்
சேவல் சண்டை போட்டியில் ஈடுப்பட்ட 8 பேர் கைது
அரவக்குறிச்சியில் சேவல் சண்டை போட்டியில் ஈடுப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள நல்லம்பட்டி மயானப் பகுதியில் சேவல் சண்டை நடத்தப்படுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்று நடத்திய சோதனையில் திருப்பூர் மாவட்டம் ஊத்தூரை சேர்ந்த அருள் வயது 20 உள்ளிட்ட 8 பேர் சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அருள் உள்ளிட்ட 8 பேர் மீது அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து, உயிரிழந்த நிலையில் 4 சேவல்கள் கைப்பற்றினர். மேலும் ரூ.1,200 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.