உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா?
ராமநாதபுரம் கிராம ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டத் தில் 11ஊராட்சி ஒன்றியத்தில் 429ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிரா மங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும்நிலையில் அதற்கேற்ப மழைநீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் கொசுக்கள் பரவி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது.
கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங் களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.
எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய் அமைப்புகளை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் நீண்டநாள் கனவை நனவாக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.